பாடல் : குயில் பாட்டு,
படம் : என் ராசாவின் மனசிலே,
இசை : இளையராஜா
பாடியவர் : ஸ்வர்ணலதா
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ....
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்
அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓ ஓ ....
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ ....
மன்னவனும் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் ஆனதின்று சோக கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே .... வாசல் தேடுதே ....
குயில் பாட்டு ஓ வந்ததேன்ன இளமானே....
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே....
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.