Showing posts with label Nee Pathi Naan Pathi. Show all posts
Showing posts with label Nee Pathi Naan Pathi. Show all posts

Saturday, September 29, 2012

Nee Paathi Naan Paathi Kanne Tamil Lyrics

பாடல்       :    நீ பாதி நான் பாதி கண்ணே,
படம்          :    கேளடி கண்மணி,
இசை        :     இளையராஜா,
பாடியவர்கள்  :   மனோ, உமா ரமணன்


M  :   நீ பாதி நான் பாதி கண்ணே 
F   :   அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
M  :   நீ பாதி நான் பாதி கண்ணே 
F   :   அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
M :    நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F  :   நீ பாதி நான் பாதி கண்ணே 
M :   அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 


F   :    வானப்பறவை  வாழ  நினைத்தால்  வாசல் திறக்கும் வேடந்தாங்கல் 
M  :    கானப்பறவை  பாட  நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் 
F   :    மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம்       
          இருக்கும் உன்னாலே 
M  :    மெல்லச் சிறுக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித்  தெறிக்கும் 
F  :     மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது .....
M :     நீ பாதி நான் பாதி கண்ணே 
F  :     அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
F  :     நீ பாதி நான் பாதி கண்ணா 
M :    அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே


M  :    இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே 
F   :    இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும்  தொடர்ந்து   
          வருவேன்  
M  :    சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு 
          கண்ணே  வா ..
F :      இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் 
          அன்பே வா
M  :    சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் ....


F   :   நீ பாதி நான் பாதி கண்ணா 
M  :  அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
M :    நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F  :    நீ பாதி நான் பாதி கண்ணே 
M :    அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே