Showing posts with label Aadal Kalaye. Show all posts
Showing posts with label Aadal Kalaye. Show all posts

Thursday, October 4, 2012

Aadal Kalaye Tamil Lyrics

பாடல்  :  ஆடல் கலையே,
படம்    :    ஸ்ரீ ராகவேந்திரா ,
இசை  :   இலராஜா,
பாடியவர்கள் :  KJ ஜேசுதாஸ் 


ஆடல் கலையே தேவன் தந்தது 
தேவனின் ஆடலில் தான் ஜீவன் தந்தது 
ஆடல் கலையே தேவன் தந்தது 
தேவனின் ஆடலில் தான் ஜீவன் தந்தது

ஆடல் கலையே தேவன் தந்தது 

மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் 
மெல்லிசையின் ஓசையைப் போல் மெல்ல சிரித்தாள் 
வண்ண வண்ண மேலாடை .....
வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும்  பைங்கிளி 
மான்கூட்டம் மயங்கத் தாவி தாவித்தான் வந்தாள் 
ஆடல் கலையே தேவன் தந்தது 
தேவனின் ஆடலில் தான் ஜீவன் தந்தது


 சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் 
சிற்றிடைதான் கன்ன்பரிக்கும் மின்கொடியோ 
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா 
பெண்ணென காலெடுத்து வந்ததொருலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ 
முள்ளிருக்கும்  கல்லிஐக்கும் பூவழகோ 
தலைசிறந்த  கலை விளங்க நடம் புரியும் பதுமையோ புதுமையோ 
சதங்கைகள் தழுவிய பதங்களில்  பலவித ஜாதி ஸ்வரம் வருமோ 
குரல் வழி வரும்  அணிமொழி ஒரு  சரச பாஷையோ 
சுரங்களில் புது சுகங்களைத்  தரும் சாருகேசியோ 
ஸ ஸ ஸ  ஸ ரி க ம ம  பாஸா நிரி ஸா  நிரிஸநித
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் 
 
 
ஆடல் கலையே தேவன் தந்தது 
தேவனின் ஆடலில் தான் ஜீவன் தந்தது