Showing posts with label Unna Vida. Show all posts
Showing posts with label Unna Vida. Show all posts

Friday, October 21, 2011

Unna Vida Tamil Lyrics, Movie : Irumandi

பாடல்               :    உன்ன விட ,
படம்                  :   விருமாண்டி, 
இசை                 :   இளையராஜா , 
பாடியவர்கள்    :    ஸ்ரேயா கோஷல் , கமல்ஹாசன்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது 
ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல 
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள 
யாரும் இல்லை யாரும் இல்லை
வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லை எவளுமில்லை
உன்ன  விட ..... என்ன  விட ........

அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் கொளத்துககு  உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கனா கெனா  வந்து கொல்லுது
இதுக்கு பேறு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ....
உன்னை விட .................................
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேக்கயில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போதிக்கிற நமக்கது மூடு துணி 
உன்னை விட ......

உன் கூட நான்  கூடி இருந்திட
எனக்கு சென்மம் ஒண்ணு போதுமா
நூறு ஜென்மம் வேணும்  அத கேக்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய ? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா ?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வாரம் ஏதும் கேட்போமா ?
சாகா வாரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய
காத்தா  அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆனா போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது 
ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல 
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள 
யாரும் இல்லை யாரும் இல்லை

வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனமெல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள 
யாரும் இல்லை யாரும் இல்லை
என்ன விட 
உன்ன விட