Showing posts with label Oru Iniya Manadhu. Show all posts
Showing posts with label Oru Iniya Manadhu. Show all posts

Sunday, September 4, 2011

Oru Iniya Manadhu Tamil Lyrics , Movie : Johny

 பாடல்    :   ஒரு இனிய மனது , 
 படம்      :   ஜானி 
 இசை    :    இளையராஜா 
 பாடியவர் : ஜென்சி

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
ஜீவனானது இசை நாதமேன்பது …முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசைஎன்றானது
ஆஹா .. எண்ணத்தின் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் ..
இணைந்தோடுது ..இசை பாடுது ….
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே ..சுவையூட்டும் வண்ணமே ..மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்