Showing posts with label sahaayane. Show all posts
Showing posts with label sahaayane. Show all posts

Tuesday, October 2, 2012

Sahaayane Tamil Lyrics

பாடல் :  சஹாயனே,
படம்    :   சவுக்கு,
இசை   :   இமான் ,
பாடியவர் :  ஸ்ரேயா கோஷல்,
வருடம்  :


சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன்  பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கு என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ..முளைத்தாய் 

ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசியின்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும்  உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன
தவறி விழுந்த பொருள் போல் எனை எடுதாயடா
தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே  என்னைக் கையில் ஏந்து
எல்லை  ஏதும் இல்லை அன்பில் எந்து
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே..

கனவிலும் காணாத வகையினில்  உன் தோற்றம்
எனக்குள்ளும் கூச்சல் போட
இதுவரை கேட்க்காத இசையினை உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட
இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம்   கொடுத்தாயடா
கள்ளப்பார்வை என்னைக் கொத்தித் தின்ன
என்ன எது என்று உள்ளம் எண்ண எண்ண


சகாயனே சகாயனே நெஞ்சுக்குள்  நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன்  பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்கு என் கன்னங்கள் பூத்து
நீ வயதுக்கு வாசம் தந்தாய்