Showing posts with label Nenjil Nenjil Idho. Show all posts
Showing posts with label Nenjil Nenjil Idho. Show all posts

Wednesday, December 21, 2011

Nenjil Nenjil Idho Idho Tamil Lyrics , Movie : Engeyum Kadhal

 பாடல்              :   நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ,
 படம்                :   எங்கேயும் காதல் ,
 இசை               :  ஹாரிஸ் ஜெயராஜ் , 
 பாடியவர்கள்    :  ஹாரிஸ் ராகவேந்திரா, சின்மயி 
 வருடம்             :   2011

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் 
மூலை வானம்  மூவாலை மூட்டுதோ  (2)

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் 
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
வெண்  மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி  வழிவது ஏன்?
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரைக்  காண வேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த
 

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
விரதம் முடித்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் தூரம் அது
ஒரு வெள்ளைத் திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளக் காணின் காதல் காதில்  துடிக்க துடிக்க
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் 
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்