Friday, March 16, 2012

Oh Vasantha Raja Tamil Lyrics

பாடல்                 :    ஒ வசந்த ராஜா,
படம்                   :     நீங்கள் கேட்டவை,
இசை                  :     இளையராஜா,
பாடியவர்கள்    :     SP பாலசுப்ரமணியம் , S ஜானகி.

ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன்  தேகம் என்  தேசம்  நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே   
ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஒ...

வெண் பஞ்சு மேகங்கள்  உன் பிஞ்சு பாதங்கள் 
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு 
விண் சொர்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே 
சூடிய பூச்சரம் வானவில் தானோ

ஒ வசந்த ராஜா 
தேன் சுமந்த ரோஜா ஒ....
என் தேகம் உன் தேசம்  நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே  

 ஒ வசந்த ராஜா
 தேன் சுமந்த ரோஜா

ஆராதனை நேரம்  ஆலாபனை ராகம் 
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு(2
மன்மதக் கோவிலில் பாலபிஷேகம் 
ஒ வசந்த ராஜா 
தேன் சுமந்த ரோஜா ஒ....
உன் தேகம் என் தேசம் என்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே  
ஒ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா ..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.