Thursday, March 15, 2012

Dhevathai Vamsam Neeyo Tamil Lyrics

பாடல் :    தேவதை வம்சம் நீயோ,
படம்   :    சிநேகிதியே ,
இசை  :    ரகுநாத் சேத்,
பாடியவர்கள் :  சித்ரா, சுஜாதா,
வருடம் :  2000 

தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ 
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ 
பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் இங்கே வருவதும் நீயோ 

நக்ஷத்திரப்  புள்ளி வானம் எங்கும் வைத்து 
நிலவுன்னைக் கோலம் போடா அழைத்திடும் 
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று 
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் 
பெண் பூவே நீயும் ஆட ..முகில்கள் ஊஞ்சல் ஆடும் 
உலாவும் தென்றல் வந்து ..உன் ஊஞ்சலை அசைத்தே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே 
உனைச் சுட்டு வருத்திய வானம் அது 
இரவினில் முழுவதும் அதை எண்ணியே 
பனித்துளி சிந்தியே அழுகிறது  

தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் இங்கே வருவதும் நீயோ 

வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே 
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும் 
என்றும் உந்தன் நட்பு மட்டும் போதுமே 
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள் 
உன்.னோடு ஓர் ஓர் நிமிஷம் ..உயிருக்கு ஆனந்தங்கள்...
பூக்கள் எல்லாம் உன்னைதொட தவமிருக்கும் ம்
நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும் 
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும் 
 
தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ 
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.