பாடல் : இன்பமே உந்தன் பேர்,
படம் : இதயக்கனி
பாடியவர்கள் : TM சௌந்தரராஜன் , P சுஷீலா
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர்கள் : TM சௌந்தரராஜன் , P சுஷீலா
இசை : MS விஸ்வநாதன்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ ...
என் இதயக்கனி , நான் சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி , என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி ..
இன்பமே.... உந்தன் பேர் வள்ளலோ O..o..(2)
உன் இதயக்கனி , நான் சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி, உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி ..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ ..ஒ...
சர்க்கரை பந்தல் நான்
தேன் மழை சிந்த வா (2)
சந்தன மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே (2)
தேனோடு பால் தரும் செவ்விளநீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ ...
பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
கை விரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண் தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
இன்பமே.... உந்தன் பேர் வள்ளலோ..ஒ..ஒ.
மல்லிகைத் தோட்டமோ
வெண் பனிக் கூட்டமோ(2)
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாகும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பா..டும்
மாளிகை வாசலில் அடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ ...
என் இதயக்கனி , நான் சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி , என் நெஞ்சில் ஆடும்
பருவக்கொடி ..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ....ஒ....
Any Wall TV & AV Accessory Shelving with 2 adjustable shelves - (Google Affiliate Ad)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.