பாடல் : கால காலமாக வாழும்
படம் : புன்னகை மன்னன் ,
பாடியவர்கள் : சித்ரா ,S.P.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள் : வைரமுத்து ,
இசை : இளையராஜா
இசை : இளையராஜா
கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட
கண்டதில்லை எங்கள் சொப்பனம்
பூமி
எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம்
யாரடா நான் தீயடா ஹே பகைவனே போ ......
கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம்
வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை
தடை யாரும் இல்லை
தடை யாரும் இல்லை
எங்கள் அன்புக்கு
தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை
மலர் மாலை நாளை
மலர் மாலை நாளை
முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை
பூவாக மாறாதோ
முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ
ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது
பகையே பகையே விலகு விலகு ஓடு ...
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்
மோதி பார்க்காதே என்னை கண்டு நீ வாழை தண்டு
இவன் யானை கன்று
இவன் யானை கன்று
நாளும் போராடும் வீரம் உண்டு சுய மானம் உண்டு பகை வெல்வோம்
இன்று
பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது
பாதை இல்லாமல் போனாலும்
காதல் தேரோட்டம் நில்லாது
பந்தம் நம் பந்தம்
என்றென்றும் தீ பந்தமே
இணைவோம் இணைவோம் பகையை சுடுவோம் நாமே
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்
பூமி எங்கள் சீதனம்
வானம் எங்கள் வாகனம்
யாரடா நான் தீயடா ஹே பகைவனே போ ......
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்
AVF UNIMAX (ZMS1200) in.Any Wallin. TV & AV Accessory Shelving - Blk/Silver (Google Affiliate Ad)
AVF UNIMAX (ZMS1200) in.Any Wallin. TV & AV Accessory Shelving - Blk/Silver (Google Affiliate Ad)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.