பாடல் : ராசாவே உன்ன நம்பி
பாடியவர் : S ஜானகி
படம் : முதல் மரியாதை
கவிதை : வைரமுத்து
இசை : இளையராஜா
டைரக்டர் : பாரதிராஜா
ஆஆஆஆஹ் ஆஆஆஆஆஆஆஅஹ்
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிடீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுதா
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிடீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொரஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
காதுல நரச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சுழியுல படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு
உனக்கு வச்சி இருக்கேன் மூ...ச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.