Friday, January 27, 2012

Malayil Yaaro Tamil Lyrics , Movie : Shathriyan

 பாடல்       :   மாலையில் யாரோ,
 படம்         :   சத்ரியன் ,
 இசை        :  இளையராஜா,
 பாடியவர்  :  ஸ்வர்ணலதா


மாலையில்  யாரோ   மனதோடு  பேச  
மார்கழி   வாடை  மெதுவாக  வீச
தேகம்  பூத்ததே  ஒ .. மோகம்  வந்ததோ ..
மோகம்  வந்ததும்  ஒ .. மௌனம்  வந்ததோ ..
நெஞ்சமே .. பாடேழுது ..
அதில்  நாயகன்  பேரெழுது ...
மாலையில்  யாரோ  மனதோடு  பேச

வருவான்  காதல்  தேவன்  என்று  காற்றும்  கூற

வரட்டும்  வாசல்  தேடி நின்றேன் ஆவல்  மீற
வளையல்  ஓசை  ராகமாக இசைத்தேன்  வாழ்த்துப் பாடலை
ஒரு  நாள்  வண்ண  மாலை  சூட  
வளர்த்தேன்  ஆசைக்  காதலை
நெஞ்சமே  பாட்டெழுது ... அதில்  நாயகன்  பேரெழுது ...

மாலையில்  யாரோ   மனதோடு  பேச  

மார்கழி   வாடை  மெதுவாக  வீச 


கரைமேல்  நானும்  காற்று  வாங்கி  விண்ணைப்  பார்க்க
கடல்மீன்  கூட்டம்    ஓடி  வந்து  கண்ணைப்  பார்க்க
அடடா  நானும்  மீனைப் போல  கடலில்  பாயக்கூடுமோ
அலைகள்  வெள்ளி  ஆடை  போல  உடலின்  மீது  ஆடுமோ
நெஞ்சமே  பாட்டெழுது . .. அதில்  நாயகன்  பேரெழுது ...
 
மாலையில்  யாரோ   மனதோடு  பேச  
மார்கழி   வடை  மெதுவாக  வீச
தேகம்  பூத்ததே  ஒ .. மோகம்  வந்ததோ ..
மோகம்  வந்ததும்  ஒ .. மௌனம்  வந்ததோ ..
நெஞ்சமே .. . பாட்டெழுது . ..
அதில்  நாயகன்  பேரெழுது ...
நெஞ்சமே .. பாட்டெழுது   ..
அதில்  நாயகன்  பேரெழுது ...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.