Monday, December 12, 2011

Nilavondru Kanden Tamil Lyrics , Movie : Kairasikkaaran

பாடல்   :    நிலவொன்று கண்டேன் ,
படம்     :    கைராசிக்காரன் ,
இசை    :    இளையராஜா , 
பாடியவர்கள்  :    SP பாலசுப்ரமண்யம் , S ஜானகி .

 
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
கனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய் பூட்டு என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
நான் இங்கு நான் அல்ல என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

http://kalatmika-tamillyrics.blogspot.com/2011/12/nilavondru-kanden-tamil-lyrics-movie.html 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.