Tuesday, December 13, 2011

Vaan Pole Vannam Kondu Tamil Lyrics, Movie : Salangai Oli

பாடல்            :  வான் போலே 
படம்              :  சலங்கை ஒலி
இசை             :  இளையராஜா 
பாடியவர்கள்  :  எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் பி ஷைலஜா
வருடம்           :  1984

வான் போலே வண்ணம் கொண்டு 
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் 
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே 
ஆ அ அ 
வான்
போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே


மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே (2 
அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே 
சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

பொன்னான காவியங்கள் போற்றி பாடும் காதல் மன்னா

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே 
ஆ அ அ 
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே



பெண்களுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே
ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே 
கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே 
வானில் உந்தன் கானம்  எல்லாம் இன்றுன் என்றும்  வாழும் கண்ணா  
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே 
ஆ அ அ 
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் 
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே 
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.