பாடல் : கண்ணும் கண்ணும் கலந்து
படம் : வஞ்சிக் கோட்டை வாலிபன்
படம் : வஞ்சிக் கோட்டை வாலிபன்
இசை : C ராமச்சந்திர
பாடியவர்கள் : ஜிக்கி P.லீலா
கவிஞர் : கொத்தமங்கலம் சுப்பு
ஏ....னோ இன்...பமே புதுமையாய் காண்பதேன்
காதல் என்பது இது தானோ
இது தானோ அறியேனே
இது தானோ அறியேனே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கன்னி என்றேனடி கைகளைப் பிடித்தார்
காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கல கல கல கலவென்று ஜோராய் கையில் வலை பேசும் பாராய்
ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய் கையில் வலை பேசும் பாராய்
ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி (2)
இனி அனைவரும் மயங்கிட
ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய் கையில் வலை பேசும் பாராய்
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணை இடலாமோ
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணை இடலாமோ
பேதமையாலே மாது இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே
சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி
ஆடும் மயில் எந்தன் முன்னே
எந்த ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடதேடி
நீ படமெடுத்து ஆடாதேடி
இன்னொருத்தி நிகராகுமோ
எனக்கின்னோருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழை ஆகுமோ
பேதை பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ
மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
Thanks to K TV for this beautiful Video ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.