Monday, November 28, 2011

Azhagan Muruganidam Tamil Lyrics


பாடல்        : அழகன் முருகனிடம்,
படம்          : பஞ்சவர்ணக்கிளி
பாடியவர்  : P  சுஷீலா.

சத்தியம்  சிவம்  சுந்தரம் ..ஆ...
சரவணன்  திருப்புகழ்  மந்திரம் ..
அழகன்  முருகனிடம்  அசை  வைத்தேன் ..ஆ ...

அழகன்  முருகனிடம்  அசை  வைத்தேன்  - அவன் 
ஆலயத்தில்  அன்பு  மலர்  பூசை  வைத்தேன் 
அண்ணல்  உறவுக்கென்றே  உடல்  எடுத்தேன்  - அவன் 
அருளை  பெறுவதற்கே  உயிர்  வளர்த்தேன் ..ஆ .ஆ .ஆ ..

(அழகன்)

பனி  பெய்யும்  மலையிலே  பழமுதிர்   சோலையிலே 
கனி  கொய்யும்  வேளையிலே  கன்னி  மனம்  கொய்து  விட்டான்
பன்னிரண்டு  கண்ணழகை  பார்த்திருந்த  பெண்ணழகை 
வள்ளல்தான்  ஆள  வந்தான்  பெண்மையை  வாழ வைத்தான்
பெண்மையை  வாழ  வைத்தான் ..ஆ ..ஆ ..ஆ ..

(அழகன்)

மலை  மேல்  இருப்பவனோ ! மயில்  மேல்  வருபவனோ  !
மெய்யுருக  பாடி வந்தால்  தன்னைத்தான்   தருபவனோ  !
அலை  மேல்  துரும்பானேன் , அனல்  மேல்  மேழுகனேன் 
அய்யன்  கை  தொட்டவுடன்  அழகுக்கு  அழகானேன் 
அழகுக்கு  அஹ்சகனேன் ..ஆ..ஆ ..ஆ ...

(அழகன்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.