Monday, December 26, 2011

Kanmaniye Kadhal Enbathu Tamil Lyrics

Brother HL-2270DW Laser Printer (Google Affiliate Ad) 

பாடல்    : கண்மணியே காதல் என்பது,
படம்      : ஆறில் இருந்து அறுபது வரை
பாடகர்  : எஸ் பி பாலசுப்ரமணியம் , ஜானகி
இசை    : இளையராஜா
வருடம்  : 1979

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஆசையில் தோன்றிடும் ஜாடையில்
பாடிடும் உள்ளங்களே இந்த பாவையின் எண்ணத்திலே
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்  
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா


பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோஹமும் தாபமும்
வாலிபம் கண்ட சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க
வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன் 
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.