Wednesday, December 28, 2011

Germaniyin Senthen Malare Tamil Lyrics

 பாடல்  :  ஜெர்மெனியின் செந்தேன் மலரே,
 படம்    :   உல்லாசப்பறவைகள்,
 இசை  :   இளையராஜா
 வருடம் : 1980
 பாடியவர்கள் : SP B, S ஜானகி

ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா  அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன் 



பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா வா  வா  வா   குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா வா வா வா  எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா
உன் தோளில் பூப்போல சாய்ந்தாடவந்தேன் 
நீ கொஞ்சம் நேரம் சொர்க்கம்
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் நாயகன்  பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்


பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
பப பா பா  வா வா வா  ... எனை அணைத்தே கதை சொல்ல
லா..ல லா லா ல ... அதை சொல்வேன் சுவையாக..
வெகு நாளாக ஆசை  ராப.. பாபா ...பா பா ..
என் மார்பில்  பூமாலை  போலாட வந்தாய் 
நீ சொல்லும் பாடம்  சொர்க்கம்


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே

ப  ப  ப  பா  பா  
ப  ப  ப  பா  பா 
ப  ப  ப  பா  பா  
ப  ப  ப  பா  பா 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.