Thursday, September 22, 2011

Thendral Vandhu Theendum Bodhu Lyrics, Movie : Avatharam

 பாடல்       :   தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ,
 படம்          :   அவதாரம் ,
 இசை         :   இளையராஜா ,
 பாடியவர்  :   இளையராஜா , S ஜானகி.

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 

எவரும்  சொல்லாமலே  பூக்களும்  வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட(டை)... நீரோட(டை)... இந்த உலகம்  அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
நெலையா நில்லாது/ நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே 
அத  இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா 

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே  அன்பு தான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம்/ வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.