Tuesday, September 20, 2011

Salayoram Solai Ondru Vadum Tamil Lyrics , PayanangaL Mudivadhillai

பாடல்                :   சாலையோரம்  சோலை  ஒன்று
படம்                   :   பயணங்கள்  முடிவதில்லை  
இசை                  :   இளையராஜா
பாடியவர்கள்     :   S.P. பாலசுப்ரமணியம் , S. ஜானகி
பாடல் வரிகள்   :   வைரமுத்து
Direction               :   R. சுந்தராஜன்
வருடம்               :   1982  


F:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 

M:    பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும் 
        கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனம் ஊரெடுக்கும் 

F:     நீங்கள் எனைப் பார்த்தல் குளிரெடுக்கும்  
        மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும் 
M:    ஹே ... பாரிசாத வாசம் நேரம் பார்த்து வீசும் 
F:     மொட்டுக்கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே 
        இப்போது  ...
F:     சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
M:    கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
        கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
        சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

F:    கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ  பதிக்க 
       அலை வந்து அழித்ததினால் கன்னி மனம் தான் துடிக்க 
M:   கடலுக்கு கூட ஈரமில்லையோ 
       நியாங்களைக் கேட்க்க யாருமில்லையோ 
F :   சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
       சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
M:   பேசும் கிள்ளையே....   ஈர முல்லையே
       நேரமில்லையே...... இப்போது....

M:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
F:     கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
        கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
        தர தாத்தா தார தாத்த தார தாரார தாரா


             


   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.