Thursday, June 30, 2011

Vizhiyile En Vizhiyile KanavugaL Kalaindhathe Tamil Lyrics

பாடல்        : விழியிலே  என்  விழியிலே  கனவுகள்  கலைந்ததே ,
படம்           : வெள்ளித்திரை  ,
இசை          : GV பிரகாஷ்  ,
பாடியவர்   : சித்ரா 

விழியிலே  என்  விழியிலே கனவுகள்  கலைந்ததே
உயிரிலே  நினைவுகள்  தளும்புதே
கன்னங்களில்  கண்ணீர்  வந்து  உன்  பெயரையே  எழுதுதே
முத்தமிட்ட  உதடுகள்  உலறுதே
நான்  என்னை  காணாமல்  தினம்  உன்னை  தேடினேன்
என்  கண்ணீர்  துளியில்  நமக்காக  ஒரு  மாலை  சூடினேன்

விழியிலே  என்  விழியிலே  கனவுகள்  கலைந்ததே
உயிரிலே  நினைவுகள்  தளும்புதே

இமைகளிலே  கனவுகளை  விதைத்தேன்
ரகசியமாய்   நீர்  ஊற்றி  வளர்த்தேனே
இன்று  வெறும்  காற்றிலே  நான்  விரல்  நீட்டினேன்
உன்  கையேடு  கை  சேரத்தான்
உன்  உறவும்  இல்லை  என்  நிழலும்  இல்லை
இனி  என்  காதல்  தொலைதுரம்  தான்
நான்  சாம்பல்  ஆனாலும்  என்  காதல்  வாழுமே
அந்த  சாம்பல்  மீதும்  உனக்காக
சில  பூக்கள்  பூக்குமே

விழியிலே  என்  விழியிலே கனவுகள்  கலைந்ததே
உயிரிலே  நினைவுகள்  தளும்புதே

உள்ளிருக்கும்  இதயத்துக்கு  எனை  புரியும்
யாருக்குதான்  நம்  காதல்  விடை  தெரியும்
காதல்  சிறகானது  இன்று  சருகானது
என்  உள்   நெஞ்சம்  உடைகின்றது
உன்  பாதை  எது  என்  பயணம்  அது
பனித்திரை  ஒன்று  மறைகின்றது 
ஏன்  இந்த  சாபங்கள்  நான்  பாவம்  இல்லையா
விதி  கண்ணாமூச்சி  விளையாட
நான்  காதல்  போமையா

விழியிலே  என்  விழியிலே கனவுகள்  கலைந்ததே
உயிரிலே  நினைவுகள்  தளும்புதே

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.