பாடல் : கண்ணன் ஒரு கை குழந்தை,
படம் : பத்ரகாளி ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் , P சுஷீலா
F
கண்ணன் ஒரு கை குழந்தை கண்கள் சிந்தும் பூங்கவிதை
கையிரண்டில் நானெடுத்துப் படுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ
கண்ணன் ஒரு .....
M
உன் மடியில் நானுறங்க கண்ணிமைகள் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ
F
உன் மடியில் நானுறங்க கண்ணிமைகள் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ
M
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
F
அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லிது
M
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைத்திடவே கண்ணுறக்கம் மறைந்ததம்மா
both
ஆரரிரோ ஆரரிரோ .....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.