Song : Pattu Kannam,
Movie : Kaakki Chattai,
Music : Ilayaraja,
Singers : SP Balasubramaniyam, P Susheela.
M: பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
F தென்றல் வந்து என்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ...
ஹோய் ...ஹோய் ..
F: பட்டு கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
F : ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
M: நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ...
ஒரு நாள் - உந்தன்
பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் ...
பல நாள்
F: வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் ...
தினமும் - எந்தன் மோகத்தை நாணத்தில்
மூடி மறைத்திருந்தேன் மனதில்
மூடி மறைத்திருந்தேன் மனதில்
M: நாணம் யாவும் நூலாடை
நானே உந்தன் புது மேலாடை
F: மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம்
தொடங்கலாம் நாடகமே ......ஹோய் ..ஹோய் ...
தொடங்கலாம் நாடகமே ......ஹோய் ..ஹோய் ...
M: பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
F: தென்றல் வந்து என்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ...
ஹோய் ...ஹோய் ..
F: பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
F: கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தன்களே .. அடடா
இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ .. தலைவா
M: புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே .. கிளியே
உந்தன் பூவுடல் பார்த்தபின் சிற்பம்
வடித்தனரோ கனியே
வடித்தனரோ கனியே
F: ஆசைத்தீயை தூண்டாதே ...
போதைப் பூவை தினம் தூவாதே
போதைப் பூவை தினம் தூவாதே
அந்தியிலே வெள்ளி நிலா அள்ளித் தரும் சுகங்களே ..
ஆயிரமே ... ஹோய் .. ஹோய் ..
F: பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
M தென்றல் வந்து என்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ...
ஹோய் ...ஹோய் ..
M: பட்டு கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள உள்ளம்துள்ளும்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.