Tuesday, December 11, 2012

Oththa Roova Thaaren Tamil Lyrics

பாடல்   :  ஒத்த ரூபா தாரேன்,
படம்      :   நாட்டுப்புற பாட்டு,
இசை    :   இளையராஜா,
பாடியவர்கள்  :  அருண் மொழி, தேவி ( TV கோபலக்ரிஷ்ணன்'sdaughter )
வருடம் :  1996

ஒத்த ரூவா  தாரேன் ஒரு ஒணப்ப தட்டும் தாரேன்
ஒத்துக்கிட்டு வாடி நம்ம ஓட பக்கம் போலாம்
ஒத்த ரூவா  வேணாம் ஒரு ஒணப்ப  தட்டும் வேணாம்
ஒத்துக்கிற மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமா

பத்து ரூவா தாரேன் ஒரு பதக்கம் சங்கிலி தாரேன்
பச்சைக்கிளி வாடி நம்ம படைப்பு பக்கம் போலாம்
பத்து ரூபா வேணாம் உன் பதக்கம் சங்கிலி வேணாம்
பக்கத்தில் நிக்கிற மாமா என்ன உசுப்பி விட வேணாம்

மச்சு வீடு தாரேன் பஞ்சு மெத்த போட்டு தாரேன்
மத்தியான நேரம் வாடி மாந்தோப்புக்கு போவோம் 
அட மச்சு வீடு வேணாம் உன் பஞ்சு மெத்தையும் வேணாம் 
மல்லுக்கு நிக்கிற மாமா உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன் 

ஏய் நஞ்சையும் புஞ்சையும் வேணாம் நாலு தோட்டம் எழுதி தாரேன் 
தண்ணிக்கு போறது போல கொளத்துப் பக்க வாடி 
உன் நஞ்ச புஞ்சையும் வேணாம் நாலு தோட்டம் தொரவும் வேணாம் 
கணக்கு பண்ணுற மாமா உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன் 

சொத்து பூரா  தாரேன் சாவி கொத்தும் கையில தாரேன் 
பத்தர மணிக்கு மேல நீ வெத்தல காட்டுக்கு வாடி 
சொத்து சுகம் வேணாம் என் புத்தி கேட்ட மாமா 
உன் மஞ்ச தாலி போதும் உன் மடியில நான் வாறன் 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.