பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே,
படம் : கும்கி,
இசை : இமான்,
பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல்
வருடம் : 2012
ஹைய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச.. வா வா கத பேச ..
ஹைய்யய்யோ...
சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்
ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே ..உறவே ..உனதே ...
ஏலோ ஏலோ ஏலோ எலோல அங்காடி ஏலோஏலோ ஏலோ
ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில் தங்கிக்கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதரை கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏது காதல் ஓடமே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருமே சுகமே...
ஹைய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.