Saturday, October 13, 2012

Nalam Nalamariya Aaval Tamil Lyrics

பாடல்  :  நலம் நலமறிய ஆவல்,
படம் :  காதல் கோட்டை,
இசை  :  தேவா,
பாடியவர்கள்  :  அனுராதா ஸ்ரீராம், SPB

F     நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் 
       நீ இங்கு சுகமே   நான் அங்கு சுகமா..
M    நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா 
       நலம் அறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் 

M    தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
F     வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே 
M    கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே 
F     என் இதழ் உன்னை அன்றி பிறர் தொடலாமா 
M    இரவினில் கனவுகள் தினம் தொல்லையே 
F      உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே 
F      நலம் நலமறிய ஆவல் 
    உன்   நலம் நலமறிய ஆவல்

M    கோவிலிலே நான் தொழுதேன்  கோல மயில் உனைச் சேர்ந்திடவே 
F     கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே 
M    உன்முகம் நான் பார்க்க கடிதமே தானா ?
F     வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா? 
M    நிழற் படம் அனுப்பிடு என்னுயிரே 
F     நிஜமின்றி வேறில்லை என்னிடமே..
M    நலம் நலமறிய ஆவல்
F     உன் நலம் நலமறிய ஆவல் 
M    நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா..
F     நீ இங்கு சுகமே ...நான் அங்கு சுகமா..
M    நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் 
 

  


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.