Sunday, May 6, 2012

Then Then Then Tamil Lyrics

பாடல் : தேன் தேன் தேன்,
படம் :  குருவி,
இசை  :  வித்யா சாகர் ,
பாடியவர்கள் :  உதித் நாராயண், ஸ்ரேயா கோஷல்,
வருடம்  :  2008



பெண் :  தேன் தேன் தேன் உனைத்  தேடி அலைந்தேன் ,
               உயிர் தீயை அளந்தேன் , சிவந்தேன்  ...
ஆண்  :  தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
                உன்னை காணப்  பயந்தேன் , கரைந்தேன் ...

பெண் :  என்னவோ சொல்ல துணிந்தேன் ,
               ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
               உன்னோடு  சேரத்தானே நானும் அலைந்தேன் ...

               தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
               உயிர் தீயை
அளந்தேன், சிவந்தேன் ....

பெண் :   அள்ள வரும் கையை ரசித்தேன் ,
               ஆள வரும் கண்ணை ரசித்தேன் ,
               அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேஎ எ ன் ..

ஆண் :    முட்ட வரும் பொய்யை ரசித்தேன் ,
               மோத வரும் மெய்யை ரசித்தேன் ,
               உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன் ..

பெண் :    நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
                இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

ஆண் :     நீ செய்யும் யாவும் ரசித்தேன் ,
               நிதம் செயாததையும் ரசித்தேன் ,

பெண் :    உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் .....

                தேன் தேன் தே..^^ன் உன்னை தேடி அலைந்தேன் ,
            
உயிர் தீயை அளந்தேன் , சிவந்தேன் ....
 

ஆண்  :   சேலையில் நிலவை அறிந்தேன் ,
               காலிலே சிறகை அறிந்தேன் ,
              கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன் ..
பெண் :   திருடனே உன்னை அறிந்தேன் ,|
              திருடினாய் என்னை அறிந்தேன் ,
              இன்னும் நீ திருட தானே ஆசை அறிந்தேன் ...

ஆண் :   என் பக்கம் உன்னை அறிந்தேன் ,
              பலசிக்கல் உன்னால் அறிந்தேன் ,
பெண் :   நான் தென்றல் உன்னை அறிந்தேன் ,
              அதில் கூசும் பெண்மை அறிந்தேன் ,

ஆண் :   நீ நடமாடும் திராட்சை தோட்டம்  நேரில் அறிந்தேன்
பெண் :  தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
             உயிர்த்  தீயை
அளந்தேன் , சிவந்தேன் ...

ஆண் :   தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
              உன்னை காண பயந்தேன் , கரைந்தேன் ...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.