Sunday, January 8, 2012

Paadu Paadu Bharatha Panpaadu Tamil Lyrics, Movie : Senkottai

பாடல்  :   பாடு பாடு பாரத பண்பாடு ,
படம்    :   செங்கோட்டை, (1996)
இசை   :   வித்யா சாகர், 
பாடியவர்கள் :   அனுராதா ஸ்ரீராம், சித்ரா 
பாடல் வரிகள்  :  வைரமுத்து.

அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம
தஸ்மாத்  காருண்ய
பாவேன ரக்ஷ ரக்ஷ மகேஸ்வர...


பாடு பாடு பாரத பண்பாடு 
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு 
விண்ணோடு காற்றோடு 
மண்ணோடு ஒளியோடு 
பண்பாடு இங்கேதான் 
பிறந்ததென்று கொண்டாடு... பாடு 
பாடு பாடு பாரத பண்பாடு 
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு 

மொழிகள் பிறந்ததும் இங்கே தான்
கலைகள் பிறந்ததும் இங்கே தான் 
காதல் பிறந்ததும் இங்கே தான் 
கற்ப்பு நிலைத்தும் இங்கே தான் 
வில்லவன்  ராமன் சீதைக்காக 
வில் ஊன்றியதும் இங்கே தான் 
அக்னி தீர்த்தம் கோடி தீர்த்தம் 
அத்தனை தீர்த்தமும் இங்கே தான் 
தாலி என்னும் சின்னக்கயிறு  
வேலி ஆவதும் இங்கே தான்
தாரம் தவிர இன்னோர் பெண்ணைத் 
தாயாய்  நினைப்பது இங்கே தான் 

பாடு பாடு பாரத பண்பாடு மேலை நாடும் போற்றிடும் பண்பாடு 


சிற்பக்கலைகள்  என்னென்ன 
சித்திர கலைகள் என்னென்ன 
நடனக்கலைகள்  என்னென்ன 
நாதம் கீதம்  என்னென்ன
காளிதாசனும் கம்ப நாடனும் 
கவிதை சொன்னது என்னென்ன
ராஜ ரிஷிகளும் ஞான முனிகளும் 
வேதம் சொன்னது என்னென்ன 
விஞ்ஞானத்தால் முடியா  இன்பம் 
ஞானம் தந்தது என்னென்ன ..
இதயம் திறந்து சொல்லடி பெண்ணே
இதை விட சொர்க்கம் வேறென்ன..(2)

பாடு பாடு பாரத பண்பாடு 
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு


அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம
தஸ்மாத்  காருண்ய
பாவேன ரக்ஷ ரக்ஷ மகேஸ்வர...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.