பாடல் : என் கண்மணி,
படம் : சிட்டுக்குருவி,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், P சுஷீலா,
வருடம் : 1970
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிலிர்க்கின்றதே சிலிர்க்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ
ரசிக்கின்ற கன்னியில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ!....
என் மன்னவன் என் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
என் கண்மணி
இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி ஏதுமில்லை கவனங்களில்
இளமாமயில்...
அருகமையில் ...
வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ
இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ ..
என் மன்னவன் என் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
என் கண்மணி
தேனாம்பேட்டை super market எறங்கு...
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நீரம் இன்னும் வரவேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிலிர்க்கின்றதே சிலிர்க்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ
ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் மன்னவன் என் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
என் கண்மணி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.