பாடல் : இதுதானா,
படம் : சாமி,
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்,
பாடியவர் : சித்ரா ,
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா ...)
இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒழிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடி வளைப்பாய்
படிகளின் அடியினில் ennai அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எனங்களும் விட்டு பட்டு ஒளிந்திடுமே
(இதுதானா இதுதானா )
ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைதிடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மக்ஹிழ்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமொஅ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
ஆஹா ஹ ஹ ஹா ..ஹ ஹ..........
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.