Thursday, October 20, 2011

Naan Thedum Sevvandhi Poo Tamil Lyrics, Movie : Dharma Pathini

 பாடல்            :  நான் தேடும் செவ்வந்தி பூவிது,
 படம்              :  தர்மபத்தினி,
 இசை             :  இளையராஜா, 
 பாடியவர்கள்  :  இளையராஜா , S ஜானகி 
 வருடம்           :  1986

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)

(நான் தேடும்)

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை வயது  தடுக்கிறதே
பொன் மானே என்  யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி...அ அ அ
உன் விழி ஓடையில்  நான் கலந்தேன்
பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
நான் தேடும்
செவ்வந்திப் பூவிது ஆ ஆ ஆ .....
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது ஆ.ஆ ஆ....


மங்கைக்குள் என்ன நிலவரமோ 
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ...
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த நிலை வருமோ.. 
தள்ளாடும் பெண்  தேகம் தான் 
எந்நாளும் உன் வானம் நான் 
என் தேவா...அ அ அ
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை

நான் தேடும்
செவ்வந்திப் பூவிது ஆ.. ஆ... ஆ...
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது ஆ.... ஆ ..ஆ..
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் 
பூவோ இது வாசம்  போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்
செவ்வந்திப் பூவிது ஆ..ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்ததுஆ..ஆ..ஆஅ..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.