Friday, September 9, 2011

Kannukkul Nooru Nilava Tamil Lyrics , Movie : Vedham Pudhithu


  பாடல்             :  கண்ணுக்குள்  நூறு நிலவா
 படம்               :  வேதம்  புதிது 

 இசை              :  தேவேந்திரன்
 பாடியவர்கள்   :   SPB,சித்ரா  மற்றும் குழுவினர் 

கண்ணுக்குள்  நூறு  நிலவா  இது  ஒரு  கனவா 
கைக்குட்டை  காதல் கடிதம் எழுதிய  உறவா  (கண்ணுக்குள் )
நாணம் விடவில்லை  தொடவில்லை ஏனோ  விடை  இன்னும்  வரவில்லை 
அய்யர்  வந்து  சொல்லும்  தேதியில்  தான் வார்த்தை  வருமா  (அய்யர்)

குரு  பிரம்மா  குரு விஷ்ணு குரு தேவோ  மகேஸ்வரஹா 
குரு சாக்ஷா ...பர  பிரும்மா குருவே  நமஹா 
ஒம்  சஹனா  பாவது ...
ஒம் சகானாம் புனக்து...
சஹ வீர்யம்  கரவாவஹை 

கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய  உறவா  (கண்ணுக்குள் )
நாணம்  விடவில்லை  தொடவில்லை 
ஏனோ  விடை  இன்னும்  வரவில்லை 
அய்யர்  வந்து  சொல்லும்  தேதியில்  தான் 
வார்த்தை  வருமா  (அய்யர்)

கண்ணுக்குள் நூறு  நிலவா 
இது  ஒரு  கனவா 
கைக்குட்டை  காதல்  கடிதம் 
எழுதிய  உறவா

தென்றல்  தொட்டதும்  மொட்டு  வெடித்தால் 
கொடிகள்  என்ன  குற்றம்  சொல்லுமா 
கொல்லைத் துளசி  எல்லை  கடந்தால் 
வேதம்சொன்ன  சத்தங்கள்  விட்டு  விடுமா 
வானுக்கு  எல்லை யார்  போட்டது 
வாழ்க்கைக்கு  எல்லை நாம்  போட்டது...
சாஸ்திரம்  தாண்டி  தப்பிச்  செல்வதேது 

கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

பூவே ...பெண்  பூவே...
இதிலென்ன  அதிசயம் 
இளமையின்  அவசியம் 
இனி  என்ன  ரகசியம் 
இவள்  மனம்  புரியலையா 

ஆணின்  தவிப்பு  அடங்கிவிடும் 
பெண்ணின்  தவிப்பு தொடர்ந்துவிடும் 
உள்ளம்  என்பது  உள்ளவரைக்கும் 
இன்ப  துன்பம்  எல்லாமே  இருவருக்கும் 
என்னுள்ளே  ஏதோ  உண்டானது 
பெண்ணுள்ளம்  இன்று  ரெண்டானது 
ரெண்டா  எது  ஒன்று  பட்ட  போது  

கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய  உறவா  (கண்ணுக்குள் )
நாணம்  விடவில்லை  தொடவில்லை 
ஏனோ  விடை  இன்னும்  வரவில்லை 
அய்யர்  வந்து  சொல்லும்  தேதியில்  தான் 
வார்த்தை  வருமா  (அய்யர்)

கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய  உறவா 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.