Sunday, June 19, 2011

Azhagai Pookkuthe Tamil Lyrics , Movie : Ninaithale Inikkum

பாடல்  :அழகாய் பூக்குதே ,
படம்     : நினைத்தாலே இனிக்கும்,
இசை   : விஜய் அந்தோனி ,
பாடியவர்கள் : பிரசன்னா , ஜானகி ஐயர் 


அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள் / பந்தாடுதே
அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே

அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள் / பந்தாடுதே
ஆசையாய்  பேசிட   வார்த்தை  மோதும்
அருகிலே  பார்த்தும்  மௌனம்  பேசும்
காதலன்  கை  சிறை  காணும்  நேரம்
மீண்டும்  ஓர்  கருவறை
கண்டதாலே  கண்ணில்  ஈரம்


அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ...


கடவுளின்  கனவில்  இருவரும்  இருப்போமே
ஒ ஹோ  ஹோ ..
கவிதையின்  வடிவில்  வாழ்ந்திட  நினைப்போமே
ஒ  ஹோ  ஹோ ..
இருவரும்  நடந்தால்  ஒரு  நிழல்  பார்ப்போமே
ஒ  ஹோ  ஹோ ..
ஒரு  நிழல்  அதிலே  இருவரும்  தெரிவோமே
ஒ  ஹோ  ஹோ ..
சில  நேரம்  சிரிக்கிறேன்  சில  நேரம்  அழுகிறேன் / உன்னாலே ......
 

அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ..



ஒருமுறை  நினைத்தேன்  உயிர்  வரை  இனித்தாயே
ஒ  ஹோ  ஹோ ..
மறுமுறை  நினைத்தேன்  மனதினை  வதைத்தாயே 
ஒ  ஹோ   ஹோ ..
சிறு  துளி  விழுந்து  நிறை  குடம்  ஆனாயே
ஒ  ஹோ  ஹோ ..

அரை  கணம்  பிரிவில்   நரை  விழச் செய்தாயே
ஒ ஹோ  ஹோ ..

நீ  இல்லா  நொடி  முதல்  உயிர்  இல்லா / ஜடத்தைப்  போல்  ஆவேனே  .....

அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா / காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ..

அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்...குதே
அடடா / காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ..
ஆசையாய்  பேசிட   வார்த்தை  மோதும்
அருகிலே  பார்த்தும்  மௌனம்  பேசும்
காதலன்  கை  சிறை  காணும்  நேரம்
மீண்டும்  ஓர்  கருவறை
கண்டதாலே  கண்ணில்  ஈரம்
... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.