Thursday, May 5, 2011

Meenamma Meenamma Tamil Lyrics , Movie : Raajathi Raja

பாடல் : மீனம்மா மீனம்மா,
படம் :   ராஜாதி ராஜா , 
இசை : இளையராஜா, 
பாடியவர்கள் : மனோ , சித்ரா 

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சில் காமன் கணை மூடுதே
மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புது ராகம் இனி கேட்க்கத்தான்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள்
மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மேதை போடுங்கள்
சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தொட்டெடுத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
ப்பூஞ்சரதில் தொட்டில் கட்டி லாலிலலி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.