Sunday, September 25, 2011

Athan Varuvaha Tamil Lyrics , Movie : Dum Dum Dum

பாடல் : அத்தான் வருவாக .
படம் : டும் டும் டும்
பாடியவர்கள் : ஹரிணி , சித்ரா சிவராமன், மால்குடி சுபா
இசை : கார்த்திக் ராஜா
இயக்கம் : அழகம்பெருமாள்

மால்குடி சுபா:

அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக (அத்தான் வருவாக)
கதவ சாத்தினால் ஜன்னல் தெறப்பாக
ஜன்னல சாத்தத் தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
ஆண்: ஆமா.....
மால்குடி சுபா: பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுக தான் எனக்கு இனிப்பாக (அத்தான் வருவாக)
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: சபாஷ் கொன்னுட்டேடிமா ஹோ ஹோ ஹோஹ்....


சரணம் - 1
மால்குடி சுபா: அவுக வந்து நின்னாலே சரியாக் காது கேட்காது
முழுசாப் பார்வை தெரியாது ஒழுங்காப் பேச முடியாது
சித்ரா சிவராமன்: ஆக மொத்தம் காதல் என்ன குதூகலக் குத்தந்தான்
குதூகலக் குத்தத்துல கொழம்புது சித்தந்தான்
மால்குடி சுபா: ஒரு உலகம் எனக்காக
சித்ரா சிவராமன்: எனக்கு முன்னே இருப்பானே


சரணம் - 2

ஆண் : ஆ ஆ ஆ ஆஆஆ
மால்குடி சுபா: அவுக என்ன சொன்னாங்க
அத நான் சொல்ல மாட்டேங்க ஏய்
அவங்க என்ன தந்தாக
அழகாப் பொத்தி வச்சேங்க
சித்ரா சிவராமன்: புத்தன் கூட காதலித்தா புத்தி மாறுவானே
போதி மர உச்சியில ஊஞ்சலாடுவானே
சிரிப்பீக அழுவீக கிறுக்காகத் திரிவீக

ஆண்: லா லா லலலல லா லா லலலல லாலா (லாலா)

மால்குடி சுபா: ஹே பேபி அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே (அத்தான் வருவானே)
கதவ சாத்தினா ஜன்னல் திறப்பானே
ஜன்னல சாத்தத் தான் ம்ஹீம் ..வழியில்லையே
ஆண்: தோடா
மால்குடி சுபா: உன்னை காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுங்கத் தான் உனக்கு இனிப்பா.. ஸோ ஸ்வீட்.. (அத்தான் வருவானே)

ஆண்: ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்

ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ஓம் ஐஸ் கிரீமாய நமஹ......



 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.