Tuesday, March 1, 2011

Yey Dushyantha Tamil song Lyrics, Movie : Asal.

Song : Yey Dushyantha, 
Movie : Asal,
Music : Bharathwaj,
Singers : Surmukhi, Kumaran

F:    ஏ    துஷ்யந்தா  ஏ   துஷ்யந்தா  உன்  சகுந்தலா  தேடி  வந்தா
        ஏ    துஷ்யந்தா  நீ  மறந்ததை  உன்  சகுந்தலா  மீண்டும்  தந்தா

M:    கள்ள  பெண்ணே  என்  கண்ணை  திருடும்  கண்ணே
        என்  கற்பை  திருடும்  முன்னே  நான்  கற்பை  விட்டு  தப்பி  வந்தேன்
        மீண்டும்  நீ  நேரில்  வந்து  நின்றாய்  என்  நெஞ்சை  கொத்தி  தின்றாய்
        என்  நட்பே  உன்னை  நினைவில்லையே

F:     பூங்காவில்     மழை  வந்ததும்  புதர்  ஒன்று  குடை  ஆனதும்
        மழை  வந்து  நனைக்காமலே    மடி  மட்டும்  நனைந்தது   நடந்தது   என்ன  கதை
        ஏ  துஷ்யந்த  ஏ துஷ்யந்தா  உன்  சகுந்தலா  தேடி  வந்தா

        அழகான  பூக்கள்  பூக்கும்  தேன்  ஆற்றங்கரையில்
        அடையாளம்  தெரியாத  ஆல  மர  இருட்டில்
        இருள் கூட   அறியாத  இன்பங்களின்  முகத்தில்
        இருபெரும்  கைதானோம்  முத்தங்களின்  இருட்டில்
        வருடி  தந்த  மனதை  ,திருடி  கொண்டாய்  வயதை
        அது  கிளையோடு  வேர்களும்  பூத்த  கதை
        ஆலாலம்   காட்டுக்குள்   ஒரு  ஒட்டு  வீட்டுக்குள்ளே 
        உன்னை  போர்த்தி  கொண்டு    படுத்தேன்
        பாலாற்றில்  நீராடும்  பொது  துவட்ட   துண்டு  இல்லை
        கூந்தல்  கொண்டு  உன்னை  துடித்தேன்
       அந்த  நீல  நதி  கரை  ஓரம்  நீ  நின்றிருந்தால் நொடி  நேரம்
        நான்  ஓடி  வந்தேன்  ஒரு  ராகம்  நாம்  பழகி  வந்தோம்  சில  காலம்
        ஏ  துஷ்யந்தா   ஏ  துஷ்யந்தா  உன்  சகுந்தலா  தேடி  வந்தா

        நான்  ஆடும்  மலை  பக்கம்  ஏரிக்கரை  அருகில்
        மயில்  ஆடும்  ஜன்னல்  கொண்ட  மாளிகையின்  அறையில் ஹோ..
        கண்ணாடி  பார்த்து  கொண்டே  கலை யாவும்  பயின்றோம்
        கரு  நீல  போர்வைக்குள்ளே  இரு  நாட்கள்  இருந்தோம்
        பகலில்  எத்தனை  கனவு  இரவில்  எத்தனை  நினைவு
        தூங்காத  கண்ணுக்குள்ளே  சுக  நினைவு
        சம்மதம்  கேளாமல்  என்னை  சாய்த்து சாய்த்து    கொண்டு
       சட்டென்று  சட்டென்று  முத்தம்  தந்தாய்
        மாந்தோப்பில்  மாந்தோப்பில்  என்னை  மடியில்  போட்டுக்  கொண்டு
        புல்லில்லா  தேகத்தில்  கொஞ்சம்  மேய்ந்தாய்
        அந்த  நீல  நதி  கரை  ஓரம்  நீ  நின்றிருந்தாய்   அந்தி   நேரம்
        நான்  ஓடி  வந்தேன்  ஒரு  ராகம்  நாம்  பழகி  வந்தோம்  சில  காலம்
        பார்த்த  ஞாபகம்   இல்லையோ  பருவ  நாடகம்  தொல்லையோ
        வாழ்ந்த   காலங்கள்  கொஞ்சமோ  மறந்தது  இந்த   நெஞ்சமோ
       ஏ  துஷ்யந்தா  ஏ  துஷ்யந்தா  ஏ  துஷ்யந்தா  ஏ  துஷ்யந்தா

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.