Wednesday, March 2, 2011

Ninaithathu yaro Tamil lyrics , Movie : Pattukkoru thalaivan

பாடல் : நினைத்தது யாரோ ,
படம் : பாட்டுக்கொரு  தலைவன் ,
இசை : இளையராஜா ,
பாடகர்கள்  : மனோ , ஜிக்கி ,
பாடல் வரிகள் : கங்கை  அமரன் 

M:
நினைத்தது  யாரோ  நீதானே 
தினம்  உன்னை  பாட  நான்தானே 

நினைத்தது  யாரோ  நீதானே  

தினம்  உன்னை  பாட  நான்தானே 

நீதானே  என்  கோயில் 

உன்  நாதம்  என் வானில்
ஊர்வலம்  போவோம்  பூந்தேரில்  

F:
நினைத்தது  யாரோ  நீதானே  
தினம்  உனைப்   பாட  நான்தானே...

M:
மனதில்  ஒன்று  விழுந்ததம்மா 

விழுந்தது  பூவாய்  எழுந்ததம்மா 
கனவில்  ஒன்று  தெரிந்ததம்மா  
கைகளில்  வந்தே  புரிந்ததம்மா 
நான்  அறியாத  உலகினைப்   பார்த்தேன் 
நான்  தெரியாத  உறவினில்  சேர்ந்தேன் 
எனக்கோர்  கீதை  உன்  மனமே 
படித்தேன்    நானும்  தினம்  தினமே 
பரவசம்  ஆனேன்  அன்பே 

F:
நினைத்தது  யாரோ  நீதானே 

தினம்  உன்னை  பாட  நான்தானே 


F:
பூவெடுத்தேன்  நான்  தொடுத்தேன்  

பூஜையின்  நேரம்  நான்  கொடுத்தேன் 
காலமெல்லாம்  காத்திருபேன் 
கண்ணனைத்    தேடி  சேர்ந்திருப்பேன்

பூவிழி  மூட  முடியவுமில்லை 
மூடிய  போது  விடியவுமில்லை 
கடலைத   தேடும்  காவிரி  போல் 
கலந்திட  வேண்டும்  உன்  மடி  மேல் 
இது  புது  சொந்தம்  அன்பே 

M:
நினைத்தது  யாரோ  நீதானே 
தினம்  உன்னை  பாட  நான்தானே


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.