Tuesday, March 15, 2011

Aalappol Velappol Tamil Lyrics , Movie : Ejaman

பாடல்   :  ஆலப்போல் வேலப்போல்,
படம்     :  எஜமான் ,
இசை    :  இளையராஜா ,
பாடியவர்கள்  :  SP பாலசுப்ரமண்யம்,  சித்ரா.

F:  ஆலப்போல்  வேலப்போல்  ஆலம்   விழுது போல் 
     மாமன்  நெஞ்சில்  நானிருப்பேனே
     நாலப்போல்  ரெண்டப்போல்  நாளும்  பொழுது போல் 
     நானும் அங்கு நின்றிருப்பேனே 
     பதில் கேளு அடி கண்ணம்மா ... நல்ல நாளு 
     கொஞ்சம் சொல்லம்மா  என்னம்மா  கண்ணம்மா       ஹோய்.
     ஆலப்போல்  வேலப்போல்  ஆலம்  விழுது போல் 
     மாமன்  நெஞ்சில்  நானிருப்பேனே..

F:   என் மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
      இன்னுமென்ன வேணுமுன்னு  உத்தரவு போடச்  சொல்லு
M:  கொத்து மஞ்சள் தானரச்சு நித்தமும் நீரடச் சொல்லு
      மீனாக்ஷி குங்குமத நெத்தியில சூட்ட சொல்லு
F:   சொன்னத நானும் கேக்கறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு 
M:   அஞ்சல மால போடுறேன்  அன்னத்தின்  காதுல  ஓதிடு
F:   மாமன்  நெனப்புதான்  மாசக்  கணக்கிலே  பாடா   படுத்துதென்னையே  புது  பூவா  வெடிச்ச  பெண்ணையே

M:  ஆலப்போல்  வேலப்போல்  ஆலம்   விழுது போல்
     ஆசை   நெஞ்சில்  நானிருப்பேனே
F:   நாப்போல்  ரெண்டப்போல்  நாளும்  பொழுது போல்
      நானும் அங்கு நின்றிருப்பேனே..

M:   வேலங்குச்சி  நான் வளச்சு   வில்லு வண்டி செஞ்சிதாரேன்
       வண்டியில   வஞ்சி  வந்தா  வளச்சிக்  கட்டி  கொஞ்ச  வரேன் 
F:    ஆலங்குச்சி நான் வளச்சு பல்லகொண்ணு செஞ்சிதாரேன்
       பல்லக்கிலே மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வரேன்
M:   வட்டமாய்  காயும்  வெண்ணிலா  கொல்லுதே  கொல்லுதே  ராத்திரி
F:    கட்டிலில்  போடும்  பாயும்தான்  குத்துதே  குத்தூசி  மாதிரி
M:   ஊரும்  ஓரங்கட்டும்  ஓசை  அடங்கட்டும்
       காத்தா  பறந்து  வருவேன்
       புது  பாட்டா  படிச்சி  தருவேன்  

F:  ஆலப்போல்  வேலப்போல்  ஆலம்   விழுது போல் மாமன்  நெஞ்சில்  நானிருப்பேனே
     நாலப்போல்  ரெண்டப்போல்  நா/ளும்  பொ/ழுது போல்/ ஆசை நெஞ்சில்  நானிருப்பேனே
     பதில் கேளு அடி கண்ணம்மா  ... நல்ல நாளு 
     கொஞ்சம் சொல்லம்மா  என்னம்மா செல்லம்மா     ஹோய்.
M:  ஆலப்போல்  வேலப்போல்  ஆலம்  விழுது போல்  
      ஆசை   நெஞ்சில்  நானிருப்பேனே..
      நாலப்போல்  ரெண்டப்போல்  நாளும்  பொழுது போல் 
      நானும் அங்கு நின்றிருப்பேனே


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.