பாடல் : கவிதையே தெரியுமா,
படம் : ஜெயம் ,
இசை : RK பட் நாகர்,
பாடியவர்கள் : ஹரிணி, மாணிக்க விநாயகம்,
வருடம் : 2003
வருடம் : 2003
M: கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
கவிதையே தெரியுமா ...என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
F: குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
M: மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
F: ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
M: வானம் காணாத வேன்னிலவோன்று மோக பாலூட்டுதே
F: நாணம் பொய் நீட்டுதே ஹே ஹே
M: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான (2)
M: உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா ?
F: உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
M: புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ?
F: இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவ ?
M: வேர்வை குடை தேடவா ... ஹா ஹா
M: கவிதையே தெரியுமா... என் கனவு நீதானடி F: இதயமே தெரியுமா ..உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.