Friday, August 31, 2012

Valli Valli Ena Vandhaan Tamil Lyrics

பாடல் :  வள்ளி வள்ளி என வந்தான் 
படம்    :  தெய்வ வாக்கு,
இசை  :   இளையராஜா,
பாடியவர்கள்  :  இளையராஜா, S  ஜானகி,
வருடம்  : 1992


M :   வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் 
        புள்ளி வைத்துப்   புள்ளி போட்டான் சிறு கோலம் தான் 
        சொல்லித்தர சொல்லி கேட்டு - தினமும் 
        சொல்லித்தந்து  சிந்து பாடினான் 
        வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் 
        முல்லைச்  சரம் கொண்டு சூடினான்.
F      வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் 
        புள்ளி வைத்துப்  புள்ளி போட்டான்  சிறு கோலம் தான்

M     சொல்லால்  சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது 
F      கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள்  ஒன்றானது 
M     வண்ணப்பூ வஞ்சிப்பூ  வாய்வெடித்த வாசப்பூ 
        அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா 
F      இந்தப்பூ சின்னப்பூ கன்னிப்போகும் கன்னிப்பூ 
        வண்டு தான் வந்து தான் தட்டுமா 
M     என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
        நாணல் போல தேகம்  அதில் நாணம் ஏனம்மா...

F  :    வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் 
         புள்ளி வைத்துப்  புள்ளி போட்டான் சிறு கோலம் தான் 
         சொல்லித்தர சொல்லி கேட்டு - தினமும் 
         சொல்லித்தந்து  சிந்து பாடினான் 
         வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் 
         முல்லைச்  சரம் கொண்டு சூடினான்.
M     வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் 
        புள்ளி வைத்துப்  புள்ளி போட்டான் சிறு கோலம் தான் 

F      வந்தாள்  புல்லாங்குழல்... வாங்கியதை ஏந்தும்  மன்னன் விரல் 
M     மன்னன்  சொல்லும் கவி மங்கைக்கது  காதல் நீலாம்பரி 
F      அம்மம்மா அப்பப்பா  இன்பம் தரும் பானங்கள் 
        எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்  
M     மங்கை நீ கங்கை நீ  வெண்ணிலவின் தங்கை நீ 
        உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும் 
F      எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் 
        உன்னையன்றி வேறு இங்கே யாரும் இல்லையே ..
 
M :   வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் 
        புள்ளி வைத்துப்  புள்ளி போட்டான் சிறு கோலம் தான் 
        சொல்லித்தரச்  சொல்லி கேட்டு - தினமும் 
        சொல்லித்தந்து  சிந்து பாடினான் 
        வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் 
        முல்லைச்  சரம் கொண்டு சூடினான்.

F      வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் 
        புள்ளி வைத்துப்  புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
        சொல்லித்தரச்  சொல்லி கேட்டு - தினமும் 
        சொல்லித்தந்து  சிந்து பாடினான் 
        வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் 
        முல்லைச்  சரம் கொண்டு சூடினான்.

M     வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் 
F      புள்ளி வைத்துப்  புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
       




101 - Valli Valli Ena Vanthan

Powered by mp3skull.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.