பாடல் : ஓம் நமஹா,
படம் : இதயத்தை திருடாதே ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : S ஜானகி, மனோ .
ம்ம் ம்ம்ம் ம
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு ஓம்
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்
வான் வழங்கும் அமுத கலசம் வாய்
வழியே ததும்பி ததும்பி வழியுதோ ஓ ஒ..
தேன்பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ
மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா|^
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம் |V
செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏதேன்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம் ம்ம்ம் .
ஓம் நமஹா உருகும் உயிருக்கு ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம் ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.