பாடல் : எங்கே என் ஜீவனே
படம் : உயர்ந்த உள்ளம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் , S ஜானகி
வருடம் : 1985
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே என்னைத் தந்தேனே
கையில் தீபம் இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணைத் தந்தும் உன்னை நான்
அன்னை போல பார்ப்பேன்
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்கவா (2
விழிகள் இரண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா இனிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே என்னைத் தந்தேனே
முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை
காம பாணம் பாய்வதால் காயமகுமே (2)
கலசம் இன்று கவசமாகும்
காமன் அம்பு முறிந்து போகும்
மலர்ந்த தேகம் சிவந்து போகும்
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னைத் தந்தேனே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.