பாடல் : நாதம் என் ஜீவனே,
படம் : காதல் ஓவியம்,
இசை : இளையராஜா ,
பாடியவர் : S.ஜானகி
கவிதை வரிகள் : வைரமுத்து
தானம் தம்த தானம் தம்த
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வேறன்ன சேதி தேவனே
நானுந்தான் பாதி
இந்த பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உன்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஒ ஒ பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உன்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஒ ஒ பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே
அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜாதிகள் பாடுமே
விலகி போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே
கண்களில் மௌனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உன்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஒ ஓ பூவும் ஆளானதே
இசையை அறுத்தும் சாதக பறவை போலே நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உன்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பால்லோருதே ஒ ஓ பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே ........
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.