Tuesday, September 13, 2011

Annakkiliye Unna Theduthe Tamil Lyrics , Movie : Annakkili



பாடல்  :  அன்னக்கிளியே உன்னை தேடுதே...
படம்    :   அன்னக்கிளி,
இசை   : இளையராஜா,
பாடியவர் : S ஜானகி
வருடம் :  1976  


அன்னக்கிளி ஒன்னத்தேடுதே
ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே (2)

நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
உறங்காத...உறங்காத கண்களுக்கு ஓலைகொண்டு மையெழுதி
கலங்காம காத்திருக்கேன் கைப்பிடிக்க வருவாரோ?

(அன்னக்கிளி)

கனவோடு சிலநாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பலநாள்
கனவோடு சிலநாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பலநாள்
மழபேஞ்சா...மழபேஞ்சா வெதவெதச்சு நாத்து நட்டு கதிரறுத்து
போரடிக்கும் பொண்ணு மாமன் பொழுதிருக்க வருவாரோ

(அன்னக்கிளி)

நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக்காக்க மரமே காவல்
புள்ளிபோட்ட...புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி
நெல்லறுத்துப் போகையில் யார் கன்னியெந்தன் காவலென்று

(அன்னக்கிளி) 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.