Tuesday, December 13, 2011

Mounamana Neram Tamil Lyrics, Movie : Salangai Oli


 பாடல்              :    மௌனமான நேரம்,
 படம்                :     சலங்கை ஒலி ,
 இசை               :     இளையராஜா ,
 வருடம்             :     1984
 பாடியவர்கள்    :     SP பாலசுப்ரமண்யம்,  S ஜானகி.


மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும்  ஓர் கிளி கொதிக்கும் நீர்த்  துளி
லான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
ஆதலான  நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..இது (2 )
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது  மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்