பாடல் : கொடியிலே மல்லிகப்பூ,
படம் :
கடலோரக் கவிதைகள்,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , S ஜானகி.
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால
பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமொளச்சு பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்க சொல்லி தூண்டுதே பவள மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.