Pages

Tuesday, September 13, 2011

Mannile Mannile Tamil Lyrics, Movie :Mazhai

Padal 


மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரிபாஷை
மழையை  போல  உறவாட  மனதில்  என்ன  பேராசை


நீரில்  எழுதும்  காதல்  அழியும்

மழை  நீரே  எழுதிடும்    காதல்  அழியாதே


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா   ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு



மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்

மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்


பூ  சிதறிடும்  மேகம்  பொன்  வானவில்  வரைகிறதோ

ஏழ்  நிறங்களினால்  நமக்கொரு  மாலை  செய்கிறதோ
வான்  தரைகள்  எல்லாம்  நீர்  பூக்களின்  தோரணமோ
வான்  தேவதைகள்  ஆசிகள்  கூறும்  அர்ச்சதையோ
இத்தனை  மழையிலும்  இந்த  ஞானம்  கரையவில்லை
கன்னி  நான்  நனையலாம்  கற்பு  நனைவதில்லை
தனி  மனிதனை  விடவும்  மழை  துளி  உயர்ந்தது
இது  வரை  புரியவில்லை


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஷைலு  ஷைலு


நான்  காதலை  சொல்ல  என்  தாய்  மொழி  துணை    இல்லையே

தன்   வார்த்தைகளால்   மழை  துளி  என்  மனம்   சொல்லியதே
முன்   கோபுர   அழகை    உன்   தாவணி   மூடியதே
உன்  ரகசியத்தை   மழை  துளி  அம்பலம்   ஆக்கியதே
மழை  விழும்  பொழுதெல்லாம்  என்னை  வந்து  சேர்வாயா
காதலை  சேர்ப்பதே  மழையின்  வேலையா
அட  மலர்களில்   மழை  விழும்  வேர்களில்  வெயில்  விழும்
அதிசயம்  அறிவாயா

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்

மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரி  பாஷை
மழையை  போல  உறவாடு  மனதில்  என்ன  பேராசை

நீரில்  எழுதும்  காதல்  அழியும்

மழை  நீரே  எழுதிடும்  காதல்  அழியாதே

ஐ  லவ்  உ  ஷைலஜா   ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.