Wednesday, September 28, 2011

Malare Kurinji Malare Tamil Lyrics , Movie : Dr Shiva

பாடல்           :   மலரே குறிஞ்சி மலரே,
படம்             :   DR சிவா,
வருடம்          :   1975 
இசை            :    MS விஸ்வநாதன்,
பாடியவர்கள்  : KJ ஜேசுதாஸ் , S ஜானகி 


M   மலரே குறிஞ்சி மலரே .....
F    மலரே குறிஞ்சி மலரே....
M   தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் 
M   மலரே குறிஞ்சி மலரே...

F   யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் 
     தாய் மடி மறந்து தலைவனை சேரும் 
     பெண்ணென்னும் பிறப்பல்லவோ....
M  கொடி  அரும்பாக செடியினில் தோன்றி 
      கோவிலில் வாழும் தேவனைத் தேடும் 
      மலரே நீ பெண்ணல்லவோ ...
F   தலைவன் சூட நீ மலர்ந்தாய் 
     பிறந்த பயனை நீ அடைந்தாய் 
     மலரே குறிஞ்சி மலரே....

M  நாயகன் நிழலே நாயகி என்னும் 
     காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் 
     மகளே உன் திருமாங்கல்யம்..
F   தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் 
     தலைவனின் அன்பில் விளைவது தானே 
     உறவென்னும் சாம்ராஜ்ஜியம் 
M  தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்   
     மலரே குறிஞ்சி மலரே....

F   பாடிடும் காற்றே பறவையின் இனமே 
     பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே 
     ஓடோடி வாருங்களேன் ..
M  பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று 
      காதலில் இன்று கலந்தது கண்டு 
      நல்வாழ்த்து கூறுங்களேன் ...

     தலைவன் சூட நீ மலர்ந்தாய் 
     பிறந்த பயனை நீ அடைந்தாய் 
     மலரே குறிஞ்சி மலரே....
F   மலரே குறிஞ்சி மலரே....
M  மலரே குறிஞ்சி மலரே....

   

Monday, September 26, 2011

Aasa Adhigam Vechu Tamil Lyrics

 பாடல் :  ஆச அதிகம் வெச்சு ,
 படம்    :   மறுபடியும் ,
 இசை   :   இளயராஜா ,
 பாடியவர் : S ஜானகி.


ஆச  அதிகம்  வெச்சு  மனச  அடக்கி
வெக்கலாமா  என்  மாமா 
ஆள  மயக்கிப்புட்டு  அழக  ஒளிச்சி  வெக்கலாமா  என்  மாமா 
புது  ரோசா  நான்  என்னோடு  என்  ராசாவே  வந்தாடு  என்  செல்லகுட்டி 

ஆச  அதிகம்  வெச்சு  மனச  அடக்கி  வெக்கலாமா  என்  மாமா 
ஆள  மயக்கிப்புட்டு  அழக ஒளிச்சி  வெக்கலாமா  என்  மாமா 

சின்னப்பொண்ணு  நான்  ஒரு  செந்தூரப்பூ   நான் 
செங்கமலம்  நான்  புது  தேன்கிண்ணம்  நான் 
வெல்லக்கட்டி  நான்  நல்ல  வெள்ளிரதம்  நான் 
தங்கக்குட்டி  நான்  நல்ல  கார்காலம்  நான் 
ஒரு  போன்தேரில்  உல்லாச  ஊர்  போகலாம் 

நீ  என்னோடு  சல்லாபத்  தேர்  ஏறலாம்
அடி  ஆத்தாடி  அம்புட்டும்  நீ  காணலாம் 
இது  பூச்சூடும்  பொன்மாலை  தன  என்  செல்லகுட்டி 

ஆச  அதிகம்  வெச்சு  மனச  அடக்கி  வெக்கலாமா  என்  மாமா 
ஆள  மயக்கிப்புட்டு  அழக  ஒளிச்சி  வெக்கலாமா  என்  மாமா 

 ந  ந  ந  நானா ...ந  ந  ந  ந  நானா ந  ந ..ந  ந  ந   ந   ..நானா நானா ...

சின்னச்சிட்டு  நான்  ஒரு  சிங்காரபூ  நான் 
தங்கட்டு  நான்  நல்ல  தாழம்பூ  நான் 
வானவில்லும்  நான்  அதில்  வண்ணங்களும்  நான் 
வாசமுள்ள  நான்  அந்தி  வான்மேகம்  நான் 
என்  மச்சானே  என்னோடு  நீ  ஆடலாம் 

என்  பொன்மேனி  தன்னோடு  நீ   ஆடலாம் 
வா  தென்பாண்டி   தெம்மாங்கு  நாம்   பாடலாம் 
இது  தென்  சிந்தும்  பூஞ்சோலை ..தன என்  செல்ல  குட்டி 


ஆச  அதிகம்  வெச்சு  மனச  அடக்கி  வெக்கலாமா  என்  மாமா 
ஆள  மயக்கிப்புட்டு  அழக  ஒளிச்சி  வெக்கலாமா  என்  மாமா 
புது  ரோசா  நான்  என்னோடு  என்  ராசாவே  வந்தாடு  என்  செல்லகுட்டி

ஆச  அதிகம்  வெச்சு  மனச  அடக்கி  வெக்கலாமா  என்  மாமா 
ஆள  மயக்கிப்புட்டு  அழக  ஒளிச்சி  வெக்கலாமா  என்  மாமா 

Sunday, September 25, 2011

Oh Butterfly Tamil Lyrics , Movie : Meera

பாடல் : OH Butterfly 
படம் : மீரா , 
இசை  :இளையராஜா ,
பாடியவர்கள்   :  ஆஷா போஸ்லே , SP பாலசுப்ரமண்யன்

M:  ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
     ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
     அருகில் நீ வருவாயோ
     உனக்காக திறந்தேன் மனதின் கதவை

F:  ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
      ஏன் விரித்தாய் சிறகை ..வா வா (ஒ பட்டர்பிளை )
      எனையும் தான் உனைப்போலே
      படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்


M:  நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்
       நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
F:   ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
      ஆகா எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே
M:  உனை நான் சந்தித்தேன் ...உனையே சிந்தித்தேன்
      எனை நீ இணை சேரும்
      திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

F:  ஆகா ஒ பட்டர்பிளை பட்டர்பிளை

F:    மலர்கள் தோரும் நடந்து போகும் சிறிய ஜீவனே
       உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
M:  ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
      விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
F:   உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
      தினம் நான் எதிர் பார்க்கும்
      திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

M:   ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
        ஏன் விரித்தாய் சிறகை ..
F:    வா வா
       ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ...
       ஏன் விரித்தாய் சிறகை ..
M:   அருகில் நீ வருவாயோ
        உனக்காக திறந்தேன் மனதின் கதவை

F:   ஆகா ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை ..பட்டர்பிளை
...



Aathangara Marame Tamil Lyrics , Movie : Kizhakku Cheemayile

பாடல்:ஆத்தங்கர மரமே அரசமர இலையே,


குரல்:  மனோ, சுஜாதா
வரிகள்:வைரமுத்து
இசை : AR ரகுமான்,
படம் :  கிழக்கு சீமையிலே ,


அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சொமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிறையே நீ முழு நெலவானதெப்போ
மௌளனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ

ஆத்தங்கர மரமே அரசமர இலையே 

ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே (2)
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாருஇவ வெடிச்சி நிக்குர 

பருத்திதாவிவந்து சண்டையிடும் அந்த முகமா 
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது 

அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே அரசமர இலையே 
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
 
மாமனே ஒன்னத் தாங்காம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே


ஆத்தங்கர மரமே அரசமர இலையே 
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே 
 
தாவணிப் பொண்ணே சொகந்தானா 

தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா (2)
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த 

திண்ணையும் சொகந்தானா
மாமம்பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
ஒம்மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே அரசமர இலையே 
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற 
 பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா 
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது 

அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே அரசமர இலையே 
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே

Kanna Moochi Enada Tamil Lyrics , Movie : Kandu Konden Kandu Konden

பாடல்  :  கண்ணாமூச்சி ஏனடா,
படம்  : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ,
இசை : AR ரஹ்மான்,
பாடியவர்கள்  : KJ ஜேசுதாஸ் , KS சித்ரா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா


என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

Thom thom dhithithom Tamil Lyrics , Movie : Alli Thandha Vaanam

பாடல் : தோம் தோம் தித்தித்தோம்,
படம்: அள்ளித்தந்த வானம், 
இசை : வித்யா சாகர், 
பாடியவர்கள் : ஹரிஹரன் , KS சித்ரா 
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
கொத்திக்கொத்தி பேசும் கண்ணை திக்கித்திக்கி வாசித்தோம்
சுற்றிச்சுற்றி வீசும் காற்றை நிற்கச்சொல்லி சுவாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம் உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை முத்தம் செய்து தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
ஒற்றைச்சொல்லை சொல்லத்தானே கோடிச்சொல்லை வாதித்தோம்
மெல்லப்பேசி மெல்லத்தொட்டு மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் திருடி நேசித்தோம் கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை தின்னச்சொல்லி தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்

Athan Varuvaha Tamil Lyrics , Movie : Dum Dum Dum

பாடல் : அத்தான் வருவாக .
படம் : டும் டும் டும்
பாடியவர்கள் : ஹரிணி , சித்ரா சிவராமன், மால்குடி சுபா
இசை : கார்த்திக் ராஜா
இயக்கம் : அழகம்பெருமாள்

மால்குடி சுபா:

அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக (அத்தான் வருவாக)
கதவ சாத்தினால் ஜன்னல் தெறப்பாக
ஜன்னல சாத்தத் தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
ஆண்: ஆமா.....
மால்குடி சுபா: பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுக தான் எனக்கு இனிப்பாக (அத்தான் வருவாக)
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: சபாஷ் கொன்னுட்டேடிமா ஹோ ஹோ ஹோஹ்....


சரணம் - 1
மால்குடி சுபா: அவுக வந்து நின்னாலே சரியாக் காது கேட்காது
முழுசாப் பார்வை தெரியாது ஒழுங்காப் பேச முடியாது
சித்ரா சிவராமன்: ஆக மொத்தம் காதல் என்ன குதூகலக் குத்தந்தான்
குதூகலக் குத்தத்துல கொழம்புது சித்தந்தான்
மால்குடி சுபா: ஒரு உலகம் எனக்காக
சித்ரா சிவராமன்: எனக்கு முன்னே இருப்பானே


சரணம் - 2

ஆண் : ஆ ஆ ஆ ஆஆஆ
மால்குடி சுபா: அவுக என்ன சொன்னாங்க
அத நான் சொல்ல மாட்டேங்க ஏய்
அவங்க என்ன தந்தாக
அழகாப் பொத்தி வச்சேங்க
சித்ரா சிவராமன்: புத்தன் கூட காதலித்தா புத்தி மாறுவானே
போதி மர உச்சியில ஊஞ்சலாடுவானே
சிரிப்பீக அழுவீக கிறுக்காகத் திரிவீக

ஆண்: லா லா லலலல லா லா லலலல லாலா (லாலா)

மால்குடி சுபா: ஹே பேபி அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே (அத்தான் வருவானே)
கதவ சாத்தினா ஜன்னல் திறப்பானே
ஜன்னல சாத்தத் தான் ம்ஹீம் ..வழியில்லையே
ஆண்: தோடா
மால்குடி சுபா: உன்னை காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுங்கத் தான் உனக்கு இனிப்பா.. ஸோ ஸ்வீட்.. (அத்தான் வருவானே)

ஆண்: ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்

ஓம் கிரீம் கிரீம் ஐஸ் கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ஓம் ஐஸ் கிரீமாய நமஹ......



 

Thodu thodu Enave Tamil Lyrics , Movie : Thulladha Manamum Thullum

பாடல் :  தொட தொடவெனவே ,
படம்    :  துள்ளத மனமும் துள்ளும் ,
இசை   :  SA ராஜ்குமார் , 
பாடியவர்கள் : ஹரிஹரன் , KS சித்ரா 


F:   தொட  தொட  எனவே  வனத்தில்  என்னை  தூரத்தில்  அழைக்கின்ற  நேரம் 
M:  விடு  விடு  எனவே  வாலிப  மனது  விண்வெளி  விண்வெளி  ஏறும் 

F:   மன்னவா ஒரு  கோவில்  போல்  இந்த  மளிகை  எதற்காக 
M:  தேவியே  என்  ஜீவனே  இந்த  ஆலயம்  உனக்காக
F:   வானில்  ஒரு  புயல்  மழை  வந்தால்  அழகே  எனை  எங்கனம்  காப்பாய்   
M:  கண்ணே  உன்னை  என் கண்ணில்  வைத்து  இமைகள்  என்னும்           கதவுகள்      அடைப்பேன் 
F:  சாத்தியம்    ஆகுமா 
M:  நான்  சத்தியம்  செய்யவா  




F:  தொட  தொட  எனவே  வானவில்  என்னை  தூரத்தில்  அழைக்கின்ற  நேரம்

       இந்த  பூமியே  தீர்ந்து  பொய்  விடில்  என்னை  எங்கு  சேர்ப்பாய்   
M: நட்சத்திரங்களை     தூசி  தட்டி  நான் நல்ல  வீடு  செய்வேன் 

F:    நட்சத்திரங்களின்    சூட்டில்  நன்  உருகி  போய்  விடில்  என்  செய்வாய் 
M:   உருகிய  துளிகளை  ஒன்றாக்கி  என்னுயிர்  தந்தே  உயிர்தருவேன் 
F:    ஏ  ராஜா  இது  மெய்  தானா... 
M:   ஏ  பெண்ணே  தினம்  நீ செல்லும்  பதில்  முள்   இருந்தால்  நன்  பாய்   விரிப்பேன்  என்னை  
F:    நான்  நம்புகிறேன்   உன்னை 
      தொட  தொட  எனவே  வானவில்  என்னை  துரத்தில்  அழைக்கின்ற  நேரம் 
M:  விடு  விடு  எனவே  வாலிப  மனது  விண்வெளி  விண்வெளி  ஏறும்  
 

F:    நீச்சல்  குளம்  இருக்கு  நீரும்  இல்லை  இதில்  எங்கு  நீச்சல்  அடிக்க  
M:  அக்தர்  கொண்டு  அதை  நிரப்ப  வேண்டும்  இந்த  அல்லி   ராணி  குளிக்க   
F:   இந்த  ரீதியில்  அன்பு  செய்தால்   என்னவாகுமோ  என்  பாடு  
M:  காற்று  வந்து  உன்  குழல்  கலைத்தால்  கைது  செய்வதென  ஏற்ப்பாடு 
F:   பெண்  நெஞ்சை  அன்பால்  வென்றாய்  
M:  ஏ...  ராணி  அந்த  இந்திரலோகத்தில்  நான்   கொண்டு  தருவேன்  நாள்  ஒரு  பூ   வீதம் 
F:    உன்  அன்பு  அது  போதும்  
      தொட  தொட  எனவே  வானவில்   என்னை  தூரத்தில்  அழைக்கின்ற  நேரம் 
M:   விடு  விடு  எனவே  வாலிப  மனது  விண்வெளி  விண்வெளி  ஏறும் 
F:   மன்னவா ஒரு  கோவில்  போல்  இந்த  மளிகை  எதற்காக 
M:  தேவியே  என்  ஜீவனே  இந்த  ஆலயம்  உனக்காக 
F:   வானில்  ஒரு  புயல்  மழை  வந்தால்  அழகே  எனை  எங்கனம்  காப்பாய் 
M:  கண்ணே  உன்னை  என் கண்ணில்  வைத்து  இமைகள்  எனும்  கதவுகள்  அடைப்பேன் 
F: சாத்தியம்  ஆகுமா 

M: நான்  சத்தியம்    செய்யவா